எங்கள் சலுகைகள்
குழந்தைப் பேற்றிற்கான தயார்படுத்தல் வகுப்புகள்
பன்மிலர் சங்கத்தின் குழந்தைப் பேற்றிற்கான தயார்ப்படுத்தல் வகுப்புகள். கூட்டு வகுப்புகள் மற்றும் பன்மொழி வகுப்புகள். அவை வோ மாநிலத்தில் வசிக்கும் புலம்பெயர்ந்த வருங்கால பெற்றோருக்காக. வடிவமைக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கப்பட்ட தலைப்புகள்:
- o கர்ப்பம் மற்றும் பிரசவம்
- தாய்ப்பால் மற்றும் குழந்தை பராமரிப்பு
- பெற்றோர்த்துவம் மற்றும் சுகாதார பிணையம்
இந்த சந்திப்புகள் மருத்துவச்சிகள் மூலம் எளிதாக்கப்படுகின்றன மற்றும் சமூக மொழிபெயர்ப்பாளர்களால் மொழிபெயர்க்கப்படுகின்றன. அவை Lausanne, Yverdon, Payerne, Aigle, Vevey, Clarens, Renens மற்றும் Nyon ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.
இவைகள் மருத்துவக் காப்புறுதியினாலும் (LAMal) மற்றும் வோ மாநிலத்தினாலும் பொறுப்பேற்க படுகின்றன. விரும்பும் குடும்பங்கள், சங்கத்திற்கு நன்கொடையாக நிதிப் பங்களிப்பை செலுத்தலாம்.
உங்கள் பகுதியில் அடுத்த தேதிகளைப் பற்றி அறியவும்!
Yverdon
Avenue des Bains 12, 1400 Yverdon-les-Bains
Payerne
Rue du Chemin Neuf 12, 1530 Payerne
Lausanne
Rue Pré-du-Marché 23, 1004 Lausanne
Renens
Avenue des Censuy 5, 1020 Renens
Vevey
Rue de l’Union 24, 1800 Vevey
Clarens
Rue de Jaman 8, 1815 Clarens
Aigle
Place du centenaire 3, 1860 Aigle
Nyon
Rue des Marchandises 17, 1260 Nyon
பிரசவத்திற்குப் பிறகு வீட்டில் பின்தொடர்தல்
குழந்தைப் பேற்றிற்கான தயார்ப்படுத்தல் வகுப்புகலோடு, பன்மிலார் தாய்மொழி பிரெஞ்சு அல்லாத பெற்றோருக்கு பிரசவத்திற்குப் பிறகு வீட்டில் பின்தொடர்தலையும் வழங்குகிறது. அவை ஒரு தனியார் மருத்துவச்சி மூலம் வழங்கப்படுகின்றன மற்றும் ஒரு சமூக மொழிபெயர்ப்பாளரால் மொழிபெயர்க்கப்படுகின்றன.
இந்த சந்திப்புக்கள், குடும்பங்கள் அவர்களின் மொழியில்,தங்கள் குழந்தையைச் சிறந்த சூழ்நிலையில் வரவேற்க, தனிப்பட்ட ஆதரவிலிருந்து பயனடைய அனுமதிக்கின்றன. இவைகள் மருத்துவக் காப்புறுதியினாலும் (LAMal) மற்றும் வோ மாநிலத்தினாலும் பொறுப்பேற்க படுகின்றன.
மேலும் தகவலுக்கு எங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்!